முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்திற்கு நினைவு வளைவு அமைத்திட கோரிக்கை

0 362
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 28 திருச்சிமாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 28.07.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன், த.துர்காதேவி, ஜெயநிர்மலா விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதாரஅலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட மாநகரக் கழகச் செயலாளர் மண்டலம் மூன்றின் தலைவருமான மு. மதிவாணன் பேசும் போது திருச்சியில் தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால்அறிவிக்கப்பட்டு கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டிட வேண்டும், அதேபோல் 1968 முதல் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் பெற்று திருச்சி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை செய்து வந்தவரும், எல்லோராலும் சர்வ கட்சி தலைவர் என அழைக்கப்பட்டவருமான அன்பில் தர்மலிங்கத்திற்கு அவர் வாழ்ந்து மறைந்த தெப்பக்குளம் வீட்டு நுழைவு வாயில் தெப்பக்குளம் கோட்டைவாசல் அருகில் அன்பில் தர்மலிங்கம் நினைவு வளைவு அமைத்திட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழி நின்று திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த முப்பத்தாறு மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் இச்சிறப்பு தீர்மானத்தை மாமன்றத்திற்கு நான் நிறைவேற்றி தருமாறு நான் முன்மொழிகிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து மாமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.