திருவெறும்பூர் அருகே உள்ள தொண்டைமான்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகள் லதா(16) வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுதிறனாளி. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த மாரி மகன் நாகராஜ் (24) என்பவரும், லதாவும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 29ம் தேதி லதாவை நாகராஜ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார்.
அப்படி கடத்தி சென்ற லதாவை சமயபுரத்திற்கு கூட்டி சென்றவர் இரண்டு நாள் கழித்து லதாவை அவரது வீட்டிற்கு அனுப்பிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமி லதாவின் குடும்பத்தினர் லதாவை திட்டி அடித்துள்ளனர். இதனால் சிறுமி லதா கடந்த 2ம் தேதி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சுமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3ம் தேதி லதாவின் அண்ணன் ஆனந்த் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.