பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு
இணையவழி-சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் டவுன்ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருச்சி மாநகர சைபர் கிரைம், கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சமூக வளைதலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வாறு தொடங்குகிறது, பெண்களின் புகைப்படங்கள் எப்படி திருடப்பட்டு தவறாக பயன்படுத்தப்படுகிறது.
எந்த, எந்த வெப்சைட்டுகளுக்கு செல்ல கூடாது. பாலியல் வன்முறை குறித்த எச்சரிக்கை உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை பள்ளி மாணவிகளிடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமைய ஆசிரியர் அலெக்ஸாண்டர் தலைமை தாங்கினார். இதில் 60-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சிந்துந்தி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல குழு உறுப்பினர் பிரபு உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.