கேட்டால் 8, கேட்காவிட்டால் 10 : டாஸ்மார்க்கில் புதுசு

0 238
Stalin trichy visit

கேள்வி கேட்டா 8 ரூபாய் கேட்கவில்லை என்றால் பத்து ரூபாய்..டாஸ்மாக் ஊழியரின் புதிய யுக்தி… வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்கள் பத்து ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சராக முத்துசாமி பொறுப்பேற்ற பின் டாஸ்மாக் நிர்வாகம் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்க கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வடபாதிமங்கலம் அரசு மதுபான கடையில் இளைஞர் ஒருவர் 130 அதிகபட்ச விலை உள்ள மது பாட்டிலை வாங்கிவிட்டு பணம் கொடுக்கிறார்.அப்போது 140 ரூபாய் பணம் எடுத்துக்கொண்ட டாஸ்மாக் ஊழியரிடம் 140 ரூபாய் தானா 10 ரூபாய் கம்மி இல்ல என கேட்க எதுவும் பேசாமல் 2 ரூபாயை எடுத்து கோபமாக வைக்கிறார்.அதற்கு அந்த இளைஞர் இரண்டு ரூபாய் தானா அதுதான் கொடுக்க சொல்லி இருக்காங்களா இப்ப கம்மி பண்ணிட்டன்னு சொன்னாங்க எனக் கேட்டுவிட்டு உடன் வந்த நண்பரிடம் 130 ரூபாய் தான் போட்டு இருக்கு என்று புலம்பியபடி சிறிது நேரம் அங்கு காத்திருந்துவிட்டு வந்து விடுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது மேலும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் வழக்கம் போல் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கப்படுகிறது என்றும் இதை குறித்து கேள்வி கேட்டால் இரண்டு ரூபாய் மட்டும் திருப்பி கொடுக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு மதுப்பிரியர்களால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.