ஸ்குரு வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.11 லட்சம் தங்கம் பறிமுதல்

0 403
Stalin trichy visit

திருச்சி, ஆக4 திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை 6.40 மணிக்கு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று, அவரது உடமைகளை சோதனை செய்தனர். இதில் அவர் சூட்கேசில் தங்க ஸ்குருக்களில் உலோகம்(நிக்கல்) பூசப்பட்ட வடிவில் மறைத்து 186 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜாவித்(42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.