இலவச முடக்குவாத எலும்பு முறிவு மருத்துவ முகாம்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அரசு மருத்துவமனை வளாகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச முடக்குவாதம் மற்றும் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தொட்டியம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் காந்திமதி தலைமை வகித்தார். முகாமில் எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை. மூட்டு ஜவ்வுக்கான நுண்துளை அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை,மற்றும் உடல் எலும்பு தொடர்பான நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது குழந்தைகளுக்கான பிறவி வளைவு பாதம் மற்றும் முடக்குவாத சிகிச்சை, செயற்கை கை மற்றும் செயற்கைக்கால் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ஸ்ரீ மோகன கண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் நோயாளிகள், அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.