சாலை விபத்தில் ஒருவர் பலி,ஒருவர் படுகாயம்….

0 250
Stalin trichy visit

முசிறி அருகே சோளம் பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் பைக்குகள் மோதிகொண்ட விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சோளம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரராசு ( 35 ) . இவர் தனது பைக்கில் முசிறியில் இருந்து சோளம்பட்டி வந்து கொண்டிருந்தார். முசிறி, தா.பேட்டை சாலையில் சோளம் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள பாலம் அருகே வந்தபோது முசிறி வட்டம் ஆனைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா ( 27 )என்பவர் ஓட்டி வந்த பைக் சுந்தரராசு ஒட்டி வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இதில் சுந்தரராசு காயமடைந்து
முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதே போல் கார்த்திக் ராஜா காயம் அடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து சுந்தரராசு மனைவி அலமேலு அளித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிந்து ,சுந்தரராசு உடலை உடற்கூறு பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முசிறி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.