தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்…
முசிறி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், கவுன்சிலர்கள் இந்திரா, சரண்யா முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பொன்னி அனைவரையும் வரவேற்றார். மருத்துவர் சச்சிதானந்தம், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் ஆகியோர் தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினர். இந்நிகழ்வில் ஆல் தி சில்ரன் அமைப்பின் முருகையா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன், மேற்பார்வையாளர் அம்மணி, ஜெயக்கொடி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தாய்மார்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்போம் என உறுதிமொழி ஏற்றனர். நிறைவில் மேற்பார்வையாளர் ராணி நன்றி கூறினார்.