அரசுப்பள்ளியில் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு

0 357
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமெரிக்கன் இந்தியன் அறக்கட்டளை, வானவில் மன்றம் இணைந்து கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து மாணவி மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு கலந்துரையாடினர்.
பின்னர் ஒவ்வொரு மையத்திற்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மாணவ மாணவிகள் மத்தியில் பேசுகையில்,
நான் படித்த காலங்களில் பள்ளிகளின் கட்டமைப்பு இவ்வளவு சிறப்பாக இல்லை. இன்று அனைத்து பள்ளிகளிலும் நல்ல உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகம் கூட்டாக அமைந்து சிறப்பாக செயல்பட்டால் கல்வியில் சிறந்த நிலையை அடையலாம்.
நிலவுக்கும், செவ்வாய்க்கும், வரக்கூடிய ஆதித்யா சூரியனுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதற்கு திட்ட இயக்குனர்களாக இருந்தவர்கள் தமிழர்கள் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது திறமையை வளர்த்துக் கொள்வதும் வருங்காலத்தில் கருத்தில் கொண்டு அதற்கேற்றால் போல் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் நம்பிக்கையுடன் செய்யும் பொழுது சமையல் மட்டுமல்ல நாளைக்கு வரக்கூடிய ராக்கெட்டும் சிறப்பானதாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர், அரசு அதிகாரிகள், தலைமை ஆசிரியர் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.