புதிய அங்கன்வாடி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவி மங்கலம் 18 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார்.
மேலசீதேவிமங்கலம் 18 வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் 18 வது வார்டு கவுன்சிலர் திருமதி மகேஸ்வரி கௌதமன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மருது சேகர், மாவட்ட துணை செயலாளர் பானுமதி கண்ணன், மாவட்ட அவை தலைவர் அம்பிகாபதி, மணச்சநல்லூர் நகர செயலாளர் மனோகரன், பேரூராட்சி தலைவர் சிவசண்முகக்குமார் மண்ணச்சநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர், துணைத்தலைவர் கே பி ஏ செந்தில், மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள், மற்றும் திமுக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், வார்டு நிர்வாகிகள், இளைஞர் அணியினர், தகவல் தொழில் பண்ணினார் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.