மணப்பாறையில் ஜேசிஐ தேசிய தலைவருக்கு சிறப்பான வரவேற்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியிலுள்ள ஜேசிஐ மணவை கிங்ஸ், ஜேசிஐ மணப்பாறை, ஜேசிஐ மணப்பாறை டவுன், ஜேசிஐ வையம்பட்டி டவுன் ஆகிய கிளை இயக்களை பார்வையிட ஜேசிஐயின் தேசிய தலைவர் எம்.கே.கார்த்திகேயன் மணப்பாறைக்கு வருகை தந்தார். தேசிய தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டடது. ஒவ்வொரு கிளை இயக்கங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் தேசிய அளவில் நூறு சதவீத குரோத் கொடுத்த மணவை கிங்ஸ் தலைவர் ஜெயம்சக்திவேலுக்கு தேசிய தலைவர் கோல்டு காலர் வழங்கி கவுரவித்தார். மற்ற தலைவர்களுக்கு ஜேசிஐ நட்சத்திர பின் வழங்கினார். இதில் அனைத்து ஜேசிஐ அமைப்பினர்கள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.