துறையூரில் ஜெயிலர் திரைப்படம் : ரசிகர்கள் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள சினிமா திரையரங்கில் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் இன்று வெளியானது திரைப்படத்தை காண்பதற்காக ரஜினி ரசிகர்கள் ஏராளமானவர்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். திரைப்படம் வெற்றி அடைய வேண்டியும் ரஜினிகாந்த் நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டியும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். துறையூர் சிவன் கோவிலில் இருந்து ரசிகர்கள் ஊர்வலமாக திரையரங்கை அடைந்தனர். திரையரங்கில் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திரை அரங்கிற்குள் காலை முதல் காட்சி காண சென்றனர். ஜெயிலர் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து துறையூரில் இன்று திருவிழா போன்ற காட்சி அப்பகுதியில் தெரிந்தது.