அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய ஒன்றியகுழு தலைவர்
மணப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய ஒன்றியகுழு தலைவர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கோவில்பட்டி சாலையில் உள்ள தியேகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் (ஜிஹெச்சிஎல்) தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பள்ளி விலையில்லா மிதிவண்டிகளை மணப்பாறை ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி ம ணவ மாணவிகளுக்கு வழங்கினார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர் பார்வதி முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவியர்கள் கலந்துகொண்டனர்.