தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு

0 245
Stalin trichy visit

திருச்சி, ஆக.11 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணுவை நேரில் சந்தித்து கோரிக்கைளை கேட்டறிந்து முதலமைச்சரிடம் தெரிவித்துக் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.