முதல் மனைவியை ஏமாற்றி 2 வது திருமணம் செய்தவர் கைது
பெருவளநல்லூரில் முதல் மனைவியை ஏமாற்றி 2 வது திருமணம் செய்த கணவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் கிராமத்தில் முதல் மனைவி ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த கணவரை லால்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கைது செய்தார்.
லால்குடி அருகே பெருவளநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் 36 வயதான பாலகுமார். இவருக்கு திருமணமாகி 33 வயதான இளவரசி என்ற மனைவியும் சாமின் என்ற மகளும் உள்ளனர். பாலகுமார் கோயம்புத்தூரில் கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பவித்ரா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவியை
அழைத்துக் கொண்டு பெருவளநல்லூருக்கு பாலகுமார் வந்துள்ளார். அப்போது முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து முதல் மனைவி இளவரசி கடந்த 2022 ம் ஆண்டு லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர்.
அப்போது பாலகுமார் வேலை காரணமாக வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். இந்நிலையில் நேற்று வெளிநாட்டிலிருந்து பாலகுமார் திரும்பி வருவதாக லால்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கார்த்திகாயினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகாயினி பாலகுமாரை திருச்சி விமானநிலையத்திலிருந்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் உண்மை தன்மை இருந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.