மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலத்தில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லால்குடி அருகே திருமங்கலம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகன் 9 வயதான தில்சன். இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 ம் தேதி மாலையில் தனது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மாணவனை மீட்டு சிகிச்சைக்கான லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகார் புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.