ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு இ.கார்ட் வாகனங்கள் வழங்கல்
திருச்சி, ஆக.14 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டில் இ.கார்ட் வாகனங்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, ஒன்றிய பெருந்தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.