வழி தவறி வந்த மூதாட்டி சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

0 285
Stalin trichy visit

 

திருச்சி, ஆக.14  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழி தவறி வந்த 70 வயதான மூதாட்டியை மீட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்.

சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ். இவர் இன்று அதிகாலை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிவிடை பகுதியில் 70 வயதான மூதாட்டி சாலையின் நடுவே சென்று கொண்டிருந்தார். இதைக் கண்ட ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் மூதாட்டி குறித்து விசாரித்துள்ளார். அவரிடம் உடுமலைப்பேட்டை என மட்டும் கூறியுள்ளார். பின்னர் மூதாட்டிக்கு காலை உணவு வாங்கி கொடுத்து தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சமயபுரம் காவல் நிலையத்தில் மூதாட்டியை ஒப்படைத்தார்.

சமயபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருமதி கவிதா மூதாட்டியிடம் விசாரணை செய்தார். அப்போது இவர் பெயர் பழனியம்மாள் எனவும் தனது கணவர் பெயர் ஆறுமுத்துசாமி எனக் கூறியுள்ளார். மேலும் கணவர் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது காலமாகிவிட்டார். தனக்கு நான்கு பெண் குழந்தைகள் அதில் முருகம்மாள் சரம்சம்மாள் உள ளனர் எனவும் செல்லம்மாள் வேலம்மாள் ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய ஊர் உடுமலைப்பேட்டை அக்ரகாரம் என மட்டும் கூறியுள்ளார். அவருக்கு உறவினர்களின் தொலைபேசி எண்கள் குறித்து எதும் தெரியவில்லை.மேலும் 50 சதவீத நிதானத்தில் தான் மூதாட்டி உள்ளார். இதனையடுத்து மூதாட்டியின் உறவினர்களை தொடர்பு கொள்ள எந்த தொலைபேசி எண்களும் இல்லாததால் போலீசார் மூதாட்டியை உடுமலைப்பேட்டைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.