மணல் குவாரிகளை திறக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

0 393
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் திருவளர்ச்சோலை, சர்க்கார் பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்றும்,  எனவே மணல் குவாரிகளை திறக்க வேண்டுமென திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.