நீதிபதியை மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிபுறக்கணிப்பு போராட்டம்
மணப்பாறையில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியை மாற்றிடக் கோரி வழக்கறிஞர்கள் கால வரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி வழக்கறிஞர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்கிறார் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும், நீதிமன்ற பணிகளை இரவு 8 மணிவரை மேற்கொள்வதால் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்மந்தப்பட்ட நீதிபதியையும், நீதிமன்ற பணிகளில் குறுக்கீடு செய்துவரும் நீதிமன்ற கிளர்க் குமரேசனையும் பணியிடம் மாற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மணப்பாறை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து இன்று முதல் கால வரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.