பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம் பெண் உயிரிழப்பு

0 315
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம் பெண் உயிரிழந்தார்.

லால்குடி அருகே பூவாளூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் 25 வயதான குணா நன்சி. இவர் நர்சிங் முடித்துவிட்டு திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு இவரது நண்பரான புள்ளம்பாடி அருகே வந்தலைக் கூடலூர் சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்த பிராங்கிளின் மில்டன் என்பவரின் மோட்டார் பைக்கில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர் அப்போது மாடக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அமர்ந்திருந்த குணா நான்சி திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினர். பின்னர் இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.