வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

0 310
Stalin trichy visit

பம்பரம்சுத்தியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு,
தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுத்தி ஊராட்சியில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு.லால்குடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

லால்குடி அருகே பம்பரம்சுத்தி ஊராட்சியில் உள்ள அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்.
இவரது மகன் ஜம்புகேஸ்வரன் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இன்று மாலை இவரது வீட்டில்
6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயத்தில் வெளியே ஓடி வந்தனர். பின்னர் இது குறித்து ஜம்புகேஸ்வரன் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர்க்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பிரபு , வீரர்கள் அசோக், மணிகண்டன், அருண்பாண்டியன், விஜய், சாகுல் உள்ளிட்டோர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் 6 அடி நீளமுள்ள சாரைப் பாபை உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து தச்சங்குறிச்சி வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.