ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி : கதிரவன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்

0 557
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்குட்பட்ட 1 வது வார்டில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை எம்எல்ஏ கதிரவன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார் .

சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் குறைந்த மின் அழுத்தம் உள்ள சமயபுரம் மேற்கு பகுதியில் 63 கே.வி. கொண்ட மின்மாற்றி என் 28 ஐ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த புதிய மின்மாற்றியை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் இன்று திறந்து வைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் நிலவி வருவதால் அதிக மின்னழுத்தம் கொண்ட புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என எம்எல்ஏ கதிரவனிடன் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பரிசீலித்த எம்எல்ஏ கதிரவனின் சீரிய முயற்சியால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த மின்னழுத்தத்தை போக்கும் வகையில் அதிக மின்னழுத்ம் கொண்ட 63 கே.வி கொண்ட புதிய மின்மாற்றி அமைத்தனர்.இந்த புதிய மின்மாற்றியை எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து ச.கண்ணனூர் பேரூராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு உறுப்பினர் பிரதீப் குமார் அலுவலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார். பின்னர் ச. கண்ணனூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு எம்எல்ஏ கதிரவன் தனது சொந்த நிதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.