கத்தி முனையில் இளைஞரிடம் பணம், செல்போன் பறிப்பு

0 506
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் கைகாட்டியில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் கத்தி முனையில் செல்போன் பணம் பறித்துச் சென்ற மூன்று மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.

லால்குடி அருகே புதூர் உத்தமனூர் தெற்கு ஆர் சி கோவில் தெருவை சேர்ந்தவர் 27 வயதான அஜய் கார்லின்ஸ்.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்க்கு செல்வதற்க்காக இருங்களூர் கைகாட்டியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அஜய் கார்லின்ஸிடம் 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஒரு செல்போன், மற்றும் ரூ.4000 பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அஜய்காலின்ஸ் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.போலீசாரின் தேடுதல் வேட்டையில் கத்தி முனையில் பணத்தை பறித்துச் சென்ற திருவானைக்காவல் அருகே திம்மராய சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான விக்கி என்கின்ற விக்னேஷ், மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் என 3 பேர் என தெரியவந்தது. இதில் விக்கி என்ற விக்னேஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர் மேலும் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் ஒரு கத்தி மற்றும் ரூ 4000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.