100 நாள் வேலை திட்ட தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
திருச்சி, செப்.28 திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோணப்பம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (67). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவை மர்ம நபர் திறந்து வீட்டின் கப்போர்ட்டில் இருந்த இரண்டே கால் பவுன் (18 கிராம்) எடையுள்ள தங்க நகையை திருடி சென்றுள்ளார். இது குறித்து ராஜேஸ்வரி தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தா.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தங்க நகையை திருடி சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.