பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்துக்காக நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கல்
திருச்சி, செப்.28 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள
கோவண்டக்குறிச்சி, புதூர் பாளையம், மேலரசூர், முதுவத்தூர், மற்றும் பழங்காநத்தம் ஊராட்சிகளில் டால்மியா பாரத் பவுண்டேஷன் சார்பில் பெண்களின்
வாழ்வாதாரம் முன்னேற்றத்துக்கான 700 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கினர்.
கல்லக்குடியில் செயல்பட்டு வரும் டால்மியா பாரத் பவுண்டேஷன் சார்பில் கோவண்டக்குறிச்சி, புதூர் பாளையம், மேலரசூர், முதுவத்தூர், மற்றும் பழங்காநத்தம் ஊராட்சிகளில் உள்ள பெண்களின்
வாழ்வாதாரம் முன்னேற்றத்துக்கான டால்மியா சிமென்ட் ஆலை தலைவர்விநாயகமூர்த்தி வழிகாட்டுதலின்படி 140 பயனாளிகளுக்கு இலவசமாக 700 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கினர்.
இதில் கல்லக்குடி மைன்ஸ் மேனேஜர் ராதாகிருஷ்ணன்கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நாட்டு கோழி குஞ்சுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில்
டால்மியா பாரத் பவுண்டேசன் பணியாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்