உடல் உறுப்புகள் கொடை : மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு
உறுப்பு கொடை மனிதம் வாழ மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டி சான்றிதழ் மற்றும் நிதியும் வழங்கினார்கள்
கடந்த 26/09/23 அன்று திருச்சி உக்கடை அரியமங்கலம் சிப்பி நகரில் வசித்து வந்த
பாபு தானி(ஆட்டோ ஓட்டுனர்). திருமணமானவர். திருச்சி பால்பண்ணை அருகில் விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தார்.
அவரது உடன்பிறந்தவர்களின் அறிவுரையினால் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு கொடையாக வழங்க அவரது மனைவி சத்யா மற்றும் அவரது பெற்றோர் பிச்சை _ விஜயா சம்மதித்தனர்.
தமிழக முதல்வர் அறிவித்த உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிவருக்கு
அரசு மரியாதை என்ற அரசாணை முதலில் அமல்படுத்தப்பட்டது
பாபு அவர்களுக்கு
02/10/23 அன்று மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டச் செயலாளர் ஆர்.இளங்கோ மற்றும் வெ.இரா.சந்திரசேகர் ஆகியோர் பாபு வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் அவர்களது அந்த நேரத்தில் எடுத்த மன உறுதியையும் பாராட்டி சான்றிதழுடன்,6000.00 ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.