பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்! எம்.எல்.ஏ. கதிரவன் அன்புக் கட்டளை

0 219
Stalin trichy visit

சட்டமன்ற அலுவலகத்தில் எனது பிறந்தநாளை முன்னிட்டு எந்தவித சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள்,மற்றும் கொண்டாட்டங்கள் போன்று எதுவும் வேண்டாம் என தொகுதி மக்களுக்கு எம்எல்ஏ அன்புக் கட்டளை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் எனது பிறந்தநாளை முன்னிட்டு எந்தவித சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள்,மற்றும் கொண்டாட்டங்கள் போன்று எதுவும் வேண்டாம் என தொகுதி மக்கள்,திமுக நிர்வாகிகள்,நண்பர்களுக்கு அன்பு கட்டளையிட்டு அறிக்கை வெளியிட்ட எம்எல்ஏ கதிரவன்.

உங்களில் ஒருவனாக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய நான் விடுக்கும் அன்பு வேண்டுகோள்!

வருகின்ற வியாழக்கிழமை (12 ந்தேதி எனது பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துக்கொள்ள உள்ளதால் என் மீது மிகுந்த அன்பு கொண்ட கழகத் தோழர்களும், கழக நிர்வாகிகளும், எனது தொகுதி மக்களும் மற்றும் நண்பர்களும் எனது பிறந்தநாளை முன்னிட்டு எந்தவித சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள், மற்றும் கொண்டாட்டங்கள் போன்று எதுவும் வேண்டாம் என்பதுடன் என்றென்றும் உங்கள் மனதில் நிரந்தரமாக இடம்பெறுவதற்கே விரும்புகிறேன்!அதுவே எனது பிறந்த நாள் வாழ்த்துக்களாக ஏற்றுக்கொள்கிறேன் என மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் அன்புக் கட்டளையிட்டு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.