பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

0 219
Stalin trichy visit

திருச்சி, அக்.4 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள திருச்சி துறையூர் சாலையில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி(52). இவர் தனது மோட்டார் பைக்கில் மண்ணச்சநல்லூர் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் மாவட்டம் கரைகாட்டி தெருவை சேர்ந்த  ரவிக்குமார் (46) துறையிலிருந்து திருச்சி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி துறையூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக மோட்டார் பைக் மீது கார் மோதி விபத்துக்கள்ளானது. இதில் படுகாயம் அடைந்த தங்க பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக மண்ண்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.