பச்சைமலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

0 262
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சை மலையில் உள்ள கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் தாளுர். இந்த பகுதியில் விவசாய நிலத்தில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது பற்றி துறையூர் போலீஸ்சாருக்கு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் முன் விரோதம் கார னமாக அடித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? அல்லது உறவினர்கள அடித்து கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வாலிபரின் உடல் பாதி அழுகிய நிலையில் இருப்பதால் எந்த விதமான அடையாளமும் தெரியாத சூழலில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். இறந்தவரின் கையில் ஒரு சில்வர் காப்பும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ளார். பச்சைமலையில் கிடைத்த ஆண் சடலத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் துறையூர் பகுதிகளில் வாலிபர் யாரேனும் மாயமாகி உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.