திருச்சி அருகே பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் தாத்தயங்கார்பேட்டை அருகே பைத்தம்பாறை வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் முருகேசன்.

இவர் அதே கிராமத்தில் உள்ள அவருடைய மகன் செல்லதுரை என்பவரது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது முருகேசனை காம்பு கிடைத்துள்ளது இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தா.பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.