சிலம்ப போட்டியில் சாம்பியன் பட்டம் வெற்றி திருச்சி மாணவர்கள்

0 1,343
Stalin trichy visit

 

திருச்சி, அக்.9  மதுரையில் நேற்று (8.10.2023) மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நடத்திய மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது இதில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள், மான் கொம்பு மற்றும் வேல்கம்பு என ஐந்து நிலைகளில் சிலம்ப போட்டி நடைபெற்றது இதில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பல் வேறு மாணவிகள் சிலம்ப பங்கேற்று அனைத்து பிரிவிலும் தங்களது தனித்திறமையை வெளிபடுத்தினார்கள்.

இந்த போட்டியில் 14, 17, 19 வயதினர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் 600க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பெற்ற சிலம்ப போட்டிகள் நடைபெற்றன

திருச்சியில் இருந்து 130 சிலம்ப மாணவ மாணவிகள் உலக இளையோர் சிலம்ப சம்மேளத்தின் சார்பில் தமி்ழ்நாடு சிலம்ப இளையோர் சம்மேளன செயலாளர் ஆசான் ஆர்.ஆர்.நவீன் விக்னேஷ், மணிகண்ட சுப்ரமணியன், கிருஷ் கோகுல் சிலம்ப சங்க ஆசான்கள் கிருஷ்ணன், கோகுல்செல்வன் மற்றும் கலை இளமணி சுகித்தா ஆகியோர் இணைந்து திருச்சி மாவட்ட 130 சிலம்ப மாணவ மானவியர்கள் கலந்து கொண்டனர் இவர்கள் அனைவரும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு என வெற்றிகளை பெற்று அசத்தி ஒட்டு மொத்த சேம்பியன் பட்டத்தையும் வென்று திருச்சி திரும்பினார்கள்.

இவர்களை உலக இளையோர் சிலம்ப சம்மேளன தலைவர் மோகன் செயலாளர் வரகனேரி ரவிச்சந்திரன், ஆகியோர்களும் மற்றும் பெற்றோர்கள் வரவேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.