அமைச்சர்களுக்கு ஆசிரியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் நன்றி தெரிவித்தனர்

0 207
Stalin trichy visit

சென்னை, அக்.9 171 தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் நூலகர்களின் நீண்டகால கோரிக்கையினை கனிவுடன் ஏற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 171 தொழிற் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தும், 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி மூன்றாம் நிலை நூலகர்களாக தரம் உயர்த்தியும் அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றினார்கள்.
இதனை முன்னிட்டு ஆசிரியர் மற்றும் நூலகர்கள் மாண்புமிகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரை  சென்னை முகாம் அலுவலகத்தில்சந்தித்து தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.