ரயிலில் அடிப்பட்டு இளைஞர் உயிரிழப்பு

0 250
Stalin trichy visit

 

திருச்சி, அக்.9  திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் குருவாயூர் சென்னை விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லால்குடி அய்யன் வாய்க்கால் கரை பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை. இவரது மகன்  தினேஷ்குமார்(27) .இவர் நேற்று மாலை லால்குடியிலிருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக லால்குடி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையை நோக்கிச் சென்ற குருவாயூர் சென்னை விரைவு ரயிலில் அடிப்பட்டு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து திருச்சி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.