திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு

0 336
Stalin trichy visit

 

திருச்சி, அக்.10 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கவும்,சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பிடம், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நகரப் பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ச.நா. சண்முகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, புஷ்பராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கன்டோன்மெண்ட் பகுதிகளில் பாதாள சாக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயருக்கு கோரிக்கை வைத்திருந்தனர் இந்நிலையில் பாதாள சாக் கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை அகற்றுவதற்காக நவீன நீர் உறிஞ்சும் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவு களை மொத்தமாக உறிஞ்சி எடுத்து, பின்னர் குப்பை மற்றும் மண் கழிவுகளை மட்டும் தனியாக சேகரித் துக்கொண்டு மீண்டும் தண்ணீரை மட்டும் பாதாள சாக்கடையில் விட்டுவிடும். இவ்வாறு செய்வதன் மூலம் பாதாள சாக்க டைகளில் அடைப்புகள் இல்லாமல் மழைக்காலங்களில் தண்ணீர் எளிதாக செல்வதுடன் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படாமல் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பார்கள். இப்பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். இதேபோல் எங்கெல்லாம் கால்வாய்களில் அடைப் புகள் உள்ளதோ அவற்றை முழுமையாக அப்புறப்ப டுத்தி இருக்க வேண்டும். மற்ற பகுதிகளில் கால்வாய் அடைப்புகள் போன்ற பிரச்னைகள் ஏதாவது இருந்தால் அவற்றையும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக அகற்றி மழைக்காலத்தின்போது பொதுமக்களுக்கு எந்த ஒரு சிரமமும், இடையூறும் இல்லாமல் இருக்க செய்ய வேண்டும் என மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.