விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

0 358
Stalin trichy visit

திருச்சி, அக்.10 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன்பாளையம் கீழூரில் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த நிலையில் திருமணம் வேண்டாம் என கூறி வந்த இளைஞர் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மூவராயன்பாளையம் கீழூர் மேல தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் ஹரிகிருஷ்ணன்(23) .இவர் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது பெற்றோர்கள் ஹரிகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.இதில் ஹரி கிருஷ்ணனுக்கு விருப்பமில்லாததால், தனக்கு திருமணம் வேண்டாம் எனக்கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி மதியம் தனது வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.