காவிரி டெல்டாவில் நாளை முழு அடைப்பு போராட்டம்: திரளாக பங்கேற்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர செயலாளர் மு.மதிவாணன் வேண்டுகோள்
காவிரி டெல்டாவில் நாளை முழு அடைப்பு மறியல் !
கழகத் தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க அழைப்பு
திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர திமுக செயலாளர் – மு.மதிவாணன் அறிக்கை !
தஞ்சையில் (07.10.2023), காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், நம்மை விமர்சனம் செய்தும், நமக்கு துரோகம் விளைவித்திடும் வகையில் செயல்படும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசும் – கருநாடகத்தில் உள்ள ஒரு சில அமைப்புகளும் விமர்சனம் செய்வதை கண்டிக்கின்ற வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாத்திடவும் – சம்பா சாகுபடி துவங்கிட ஏதுவாக உடனே காவிரியில் மாத வாரியாக வழங்கிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 2023 அக்டோபர் 11 (புதன்கிழமை) அன்று முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டு இதனை தொடர்ந்து திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற உள்ள முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் முழு வெற்றியடைய மாநில,மாவட்ட,மாநகர நிர்வாகிள் தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள் பகுதி – ஒன்றிய – நகர – பேரூர் செயலாளர்கள் , அனைத்து அணிகளின் மாவட்ட – மாநகர அமைப்பாளர்கள், விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு இப்போராட்டம் வெற்றியடையச் செய்திட வேண்டுமென திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் கேட்டுக் கொண்டுள்ளார்.