திருச்சி மண்டல அலுவலகம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய அதாலத் கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் தொழிற்சங்கங்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மெய்நிகர் கூட்டம் வருகிற 13ந் தேதி நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள விருப்புவோர் தங்களின் யூ.ஏ.என். எண், பி.எப். கணக்கு எண், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை ro.trichy@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 12ந் தேதிகுள் அனுப்ப வேண்டும் என்று திருச்சி மண்டல அலுவலகம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.