நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

0 344
Stalin trichy visit

 

திருச்சி, அக்.11  திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடியில் உடல் சோர்வாக இருந்ததால் பெட்டிக் கடைக்கு சோடா வாங்க சென்ற மூதாட்டி திடீரென மயங்கி தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

ரெட்டிமாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி 65 வயதான அமுதா (65) .இவர் நேற்று உடல் சோர்வாக இருந்ததால் சோடா வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைக்கு சென்றுள்ளார் அப்போது சோடா வாங்கிவிட்டு திரும்பி வரும்போது திடீரென மயக்கம் வந்து தடுமாறி கீழே விழுந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்த போது மூதாட்டி உயிரிழந்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மூதாட்டியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.