மரக்கிளை விழுந்து பெண் மயக்கம்- எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை

0 421
Stalin trichy visit

திருச்சி ஏர்போர்ட் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் என்பவரது மனைவி சாந்தி(42). இவர் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில் பழம் மற்றும் ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடையின் அருகில் இருந்த காம்ப்ளக்சில் எலக்ட்ரிக்கல் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருபவர் ரத்தினம்(48).

இவர் சாந்தி கடையின் அருகில் இருந்த மரத்தை வெட்டியுள்ளார். அப்போது அந்த மரக்கிளை சாந்தியின் தலையில் விழுந்ததால் உடனடியாக சாந்தி மயக்கமடைந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினதிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.