துறையூர் அருகே விவசாய பணிகள் தீவிரம்

0 343
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சியில் சுமார் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக துறையூர் பெரிய ஏரி சின்ன ஏரி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து கிராமப்புறங்களில் விவசாயிகள் நெற்பயிர்கள் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சி பகுதியில் பெண்கள் விவசாய பணிகளில் ஈடுபடாத காரணத்தால் வட மாநிலத்தைச் சேர்ந்த மேற்கு வங்காளம் பகுதியில் இருந்து வந்திருந்த சுமார் 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விவசாய நிலங்களில் நெல் நாற்றுகளை வயல்களில் நடவு செய்து அசத்தி வருகின்றனர். ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் நெல் பயிர்களை நட்டு அசத்தி வருகின்றனர். விவசாயப் பணிகளுக்கு பெண்கள் வராத காரணத்தினாலும் 100 நாள் பணியில் அதிக நாட்டம் காட்டுவதாலும் விவசாய பணிகள் தொய்வடைந்து வந்த நிலையில் விவசாயிகள் வேறு வழியின்றி வட மாநிலங்கலை சேர்ந்த வாலிபர்களை விவசாயப் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர் பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள் சைக்கிளில் பாணி பூரி விற்பது தள்ளி வண்டியில் பாணி பூரி விற்பது கம்பளி பெட்ஷீட் போர்வை உள்ளிட்டவை விற்பனை செய்து வந்தனர் மேலும் உணவகங்களில் பணிபுரிவது உள்ளிட்ட பணியில் மட்டுமே செய்து வந்தனர். தற்பொழுது விவசாய பணிகளையும் வட மாநிலத்தவர் செய்வதால் தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள கூறி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.