அப்துல் கலாம் பிறந்த நாள் : உலக மாணவர் தினமாக கொண்டாட்டம்

0 1,094
Stalin trichy visit

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்த தினத்தை (அக்டோபர் 15) உலக மாணவர்கள் தினமாக கொண்டாட்டப்பட்டது.

திருச்சி, அக்.12  திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று (12.10.23) பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. எழிலரசி தலைமையில், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ முன்னிலையில் நடந்தது.

இதில் ரயில்வேயில் பணிபுரியும் அலுவலக மேற்பார்வையாளர் திருமதி. சாமுண்டீஸ்வரி ரங்கராஜன் கலந்துக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு 200 நோட்புக், 200 பேனா வழங்கி, கனவு காணுங்கள் – கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும்- சிந்தனைகள் செயல்களாகும் – என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர், அப்துல் காலம்.

“நமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு, ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று தான் கூறிய பொன்மொழிக்கு தானே எடுத்துக்காட்டாக இருந்து என்றும் சரித்திரத்தில் இடம் பெற்று இருக்கும் டாக்டர் ஏ.பி.ஜெ .அப்துல் கலாம் பிறந்த நாள் “உலக மாணவர்கள் தினம் ” என கூறி மாணவர்களை வாழ்த்தினார்.

இதில் மக்கள் சக்தி இயக்க மாவட்ட நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா, என்.வெங்கடேஷ், ஆசிரியர்கள் சந்திரா தேவி, வினோதினி, அருணா, விக்டோரியா, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.