இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் சி ஐ டி யு சங்கம், ஒருதலைப் பட்சமாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் நிர்வாகிகளை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம் நால் ரோடு மற்றும் பைபாஸ் அனுகு சாலையில் சிஐடியுவின் ஆட்டோ சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைபாஸ் அணுகு சாலையில் உள்ள சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து சிஐடியு ஆட்டோ சங்கம் சமயபுரம் நால்ரோட்டிலும் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் பைபாஸ் சாலையிலும் ஸ்டாண்ட் அமைத்து ஆட்டோ ஒட்டி வருகின்றனர். இதில் பழைய சிஐடியு ஆட்டோ உறுப்பினர்கள் பைபாஸ் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டியதாக கூறப்படுகிறது.இதற்கு இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால்
இரு சங்கத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து இரு சங்க நிர்வாகிகளிடம் போலீசார்,மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இந்நிலையில் சி ஐ டி யு ஆட்டோ சங்க உறுப்பினர்கள் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் ஒருதலைப் பட்சமாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இந்து ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தீர்வு கிடைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமயபுரம் நால்ரோடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று சமயபுரம் நால்ரோடு பகுதியில் பைபாஸ் ஆட்டோ ஸ்டாண்ட் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 22 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.