சமூக வலைதளங்களால் மாணவர்கள் கவனிக்கும் திறனை இழக்கின்றனர்: மாவட்ட ஆட்சியர்
மாணவர்கள் youtube, இன்ஸ்டாகிராம், ஷார்ட்ஸ் போன்றவற்றில் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களுடைய கவனிக்கும் திறனை இழக்கின்றனர்- திருச்சி மாவட்ட ஆட்சியர் பேச்சு
திருச்சி, அக். 18 திருச்சி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சித்துறை இணைந்து நடத்தும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி இன்று கலையரங்கம் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 10, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் நடத்தும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைெற்றது.
இதன் பின் மாணவர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் …
நம்முடைய சமுதாயத்தில் வேலையை வைத்து தான் ஒருவரை மதிப்பீடு செய்வார்கள்,1980 க்கு முன்னால் இன்டர்நெட் இல்லாத காலகட்டத்தில் பெரும்பாலும் படித்தவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நோக்கியே நம்முடைய பயணமும், தேடுதலும் இருக்கும், ஆனால் தற்போது அப்படி அல்ல, ரோபோடிக்ஸ், ஆர்ட்டிஃபிஷியல், இன்டெலிஜென்ஸ், எல்லாம் வளர்ந்து கொண்டு இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் என்ன தேவை என்பதை காட்டிலும் அடுத்த 20 ஆண்டுகாலம் கழித்து வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் அதற்கு நாம் எப்படி தயார் படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும் . youtube வீடியோஸ் பார்த்த காலங்கள் போய் தற்போது இன்ஸ்டாகிராம்,ஷார்ட்ஸ் என 30 செகண்ட்ஸ் மேல் நம்மால் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியவில்லை, இதனால் உங்களுடைய கவனிக்கும் திறன் இல்லாமல் போகும், குறிப்பாக மாணவர்கள் கம்யூனிகேஷன் திறமையே கற்று கொள்ளுங்கள் அது தமிழ் ,இங்கிலீஷ் எதுவாக இருநதாலும் மற்றவகளுடன் பேசி பழகி உங்கள் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள், அது உங்களை வருங்காலத்தில் சிறந்த தலைமை இடத்திற்கு கொண்டு செல்லும் என பேசினார்..