திருநாவுக்கரசர் எம்.பி.யை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எம்பி திருநாவுக்கரசரை கண்டித்தும், திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக். 18 காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக ஜவகர் செயல்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகர் மாவட்ட பதவியிலிருந்து ஜவகர் நீக்கப்பட்டு புதிய மாநகர் மாவட்ட தலைவராக திருச்சி மாநகர 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் எம் பி திருநாவுக்கரசர் தன்னிச்சையாக செயல்பட்டு மாநகர் மாவட்ட பதவியில் இருந்து ஜவகரை நீக்கி உள்ளதாகவும். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன்பு எம் பி திருநாவுக்கரசரின் புகைப்படத்தை அடித்தும், காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி எம்பி திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களையும் மதிக்காமல் செயல்படுவதாகவும் கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை அளிப்பதில்லை எனவும், காங்கிரஸ் கட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை ஆன ஒருவரை மாவட்ட தலைவராக அவர் நியமித்திருப்பது கண்டனத்துக்கு உரியது எனவும் கூறி எம்பி திருநாவுக்கரசரின் புகைப்படத்தை அடித்தும் எம் பி திருநாவுக்கரசர் ஒழிக என்ற கோஷமிட்டு 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.