பரமசிவபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா
பரமசிவபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழாவை ஒன்றிய எம் எல் ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி பரமசிவபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை எம் எல் ஏ சௌந்தர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் லால்குடி பரமசிவத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த சமுதாய வளைகாப்பு விழாவை லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி சந்தனம்,குங்குமம் பூசி வளையல் அணிவித்து மாலையிட்டு மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான உணவுகள் வாழை இலையில் பரிமாறப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கக்கூடிய சீர் வரிசைகளையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் லால்குடி வருவாய் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் குமார், நகராட்சி தலைவர் துரைமாணிக்கம், மாவட்ட திட்ட அலுவலர் வட்டார திட்ட அலுவலர், அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.