இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் பயிற்சி

0 260
Stalin trichy visit

பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் PKVY – பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் சுற்றுலா மற்றும் பயிற்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, வலையூர், திருப்பைஞ்ஞீலீ, வால்மால்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் சுற்றுலா மற்றும் பயிற்சி நடைபெற்றது.

இதில் வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் வரவேற்பு உரை ஆற்றினார்.

மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

சுகாதார ஆய்வாளர் தேன்மொழி
இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் அமிர்த கரைசல், பஞ்சகவ்யம், பூச்சி விரட்டி, மீன் கரைசல் ஆகியவை செய்யும் முறைகள் குறித்தும் பயன்படுத்தும் அளவு குறித்தும் உரை ஆற்றினார்.

வேளாண்மை உதவி அலுவலர் கதிரேசன் நன்றி உரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், பாபு, ஆனந்த், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அனிதா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கௌசிக்கா மற்றும் சுவேதா ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.