புதிய வகுப்பறை கட்டங்கள் : எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் திறந்து வைத்தார்

0 313
Stalin trichy visit

 

திருச்சி, அக். 20 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழஅன்பில் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலமேல்நிலைப்பள்ளியில் ரூ.36.50 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்களை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன்  இன்று திறந்து வைத்தார்.

கீழஅன்பில் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலமேல்நிலைப்பள்ளியில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 36.50 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது.இந்த புதிய வகுப்பறை கட்டிடங்களை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன்  இன்று திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கேற்றி வைத்து மாணவ,மாணவிகளின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜங்கமராஜபுரம் தலைவர் வீரமணி,கீழ அன்பில் தலைவர் சுதா சித்திரசேனன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சௌந்தரராஜன், ராஜ்மோகன், தேனிசை ஆசிரியர், மதி வழக்கறிஞர்,பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அசோக்குமார், எம்பிஎஸ் குமார், திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள், ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.