சாலையில் பூசணிக்காய் உடைக்காதீங்க : சமூக ஆர்வலர் விழிப்புணர்வு
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள வலைச்சேரிப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அவ்வபோது வித்தியாசமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம். இதே போல் ஆயுதபூஜை உள்ளிட்ட விழாக்காலம் தொடங்க உள்ள நிலையில் மக்கள் தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்டவைகளை சாலையில் உடைத்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்திடக் கூடாது என்பதை வலியுறுத்தி தனிநபராக மணப்பாறை பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை உடலில் தொங்க விட்டதுடன் ஒரு கையில் தேங்காய் மறு கையில் பூசணிக்காயை வைத்து கொண்டு மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.