மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

0 342
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீபரம்புதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவனுடைய மனைவி  ராஜாமணி (57) . கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இதில் மூத்த மகன்  ரமேஷ்(33) .இவர் தனது ஊரில் பால் கறவை தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த ஏழு வருடங்களாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மூத்த பெண் பிள்ளை பாட்டி ராஜாமணியுடனும் இளைய பெண் பிள்ளை மனைவியுடன் வசித்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து ரமேஷ் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவர் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றி விட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தவர் தனது தாயின் பின் பக்கம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதால் ரமேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது தாயும் தந்தையும் கடந்த 19 ந் தேதி லால்குடி அருகே பெருவளநல்லூருக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். அப்போது மன உளைச்சலில் இருந்த ரமேஷ் அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. 19 ந்தேதி இரவு 11 மணியளவில் ரமேஷிற்கு சாப்பாடு கொடுப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த தருண்குமார் என்பவர் சென்றபோது ரமேஷ் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து நேற்று ரமேஷின் தாயார் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.